பக்கம்:அண்ணாமலை தீபம் 2001.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்



இந்திய திருநாட்டில் இருக்கும் சிறப்புற்ற அறுபத்தி எட்டு சிவத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று.

03

இந்த 68 தலங்களான - காஞ்சி, கயா, காசி, இராமேஸ்சரம் - இப்படி உள்ள சிவத்தலங்கள் அனைத்திற்கும் ஒருவர் சென்று நீராடி யாகம் செய்து, தானம் செய்து வழிபடுவது என்பது அரிய செயலாகும்.

ஆனால், எந்தத் தலத்திற்கும் செல்லாமல் இந்த தலத்திற்கு வந்தாலே இல்லை இல்லை இருந்த இடத்திலிருந்து, அண்ணாமலையானை நினைத்தாலே முக்தி கிடைக்கும் மலை திருவண்ணாமலையாகும்.

ஒருவர் ஒருமுறை இத்தலத்திற்குச் சென்றால், அவர் மீண்டும்மீண்டும் இத்தலம் நோக்கி வருவர். அப்படி ஒரு அருள்சக்தி காந்தசக்தி உண்டு. அதனால், இந்த மலையை காந்தமலை என்றே அழைக்கலாம்.

இத்தலம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. மலையின் சுற்றளவோ எட்டு மைல். மலை வழிப் பாதையிலுள்ள லிங்கங்களோ எட்டு. எட்டு திசையிலிருந்து பார்த்தாலும் மலையின் அமைப்பு காண்போரை மலைப்பில் ஆழ்த்துவதாய் இருக்கிறது.

மலை என்றால் கொடிய விலங்குகள் இருக்கும். நச்சுத் தன்மை கொண்ட மரங்களும் செடி கொடிகளும் இருக்கும். அப்படி இங்கே ஏதுமில்லை. இருப்பவை எல்லாம் பயன்தரும் தருக்கலே, தீர்த்தங்களே, நன்னீர்ச் சுனைகளே, குகைகளே.

அக்குகைகளில், விருப்பாட்சிக் குகை, நமச்சிவாயர் குகை, பவழக் குகை, என பத்துக்கும் மேற்பட்ட குகைகள் இருக்கின்றன. முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம் என பல தீர்த்தங்கள் உள்ளன.

இங்குள்ள பாறைகளில் மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, வழுக்குப்பாறை போன்றவை முக்கிய மானவையாகும்.

அருள் வழங்கும் தெய்வமே அண்ணாமலை தீபமே

5