பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளி திருமணம்

33


நீ போயேன் எங்காவது தொலைந்து, யாரோ வருகிறார்களே” என்றாள்.

வேலன், பாய்ந்து சென்று, அங்கிருந்த பெரிய மரத்தின் பின்புறம் மறைந்து கொண்டான்.

வந்தது, வள்ளியின் அத்தை. மகா கைக்காரி. வள்ளியும் வேலனும் தோட்டத்துப் பக்கம் புகுந்ததைத் தெரிந்து கொண்டே வந்தாள். அவளுக்கு ஓர் மகன். அவனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேனென்று வள்ளி ஒரே பிடிவாதமாக இருந்தாள். அதனால், வள்ளி மீது வேதத்துக்குக் கோபம் பழி தீர்க்கச் சமயம் கிடைத்தது என்று எண்ணி, தொலைவில் வரும்போதே. “ ஏண்டிம்மா வள்ளி! பத்தினி! உன் யோக்யதை இதுதானா” என்று அடித்துப் பேசினாள்.

“என்ன அத்தை என்னென்னமோ பேசறீங்க, வயித்தை வலிச்சுதுன்னு தோட்டத்துக்கு வந்தேன்; விபரீதமா அர்த்தம் செய்து கொண்டு பேசறிங்க.”

“துணைக்கு வந்தானா வேலன்!”

“அவரு எங்கே வந்தாரு?”

“வந்துதான். அதோ, மாமரமா மாறி நிற்கிறானே! வாடா, அப்பா! வேலு; காலட்சேபம் கேட்டானே இராத்திரி, முருகன் வேங்கை மரமானான்னு, இவன் மாமரமாயிட்டான்.”

“ஐயோ! அத்தை சத்தியமா சொல்கிறேன், நான் வரச்சொல்லலெ, இவரே வந்தாரு, காலை மெதிச்சாரு, இந்தக் கோலத்துக்கு என்னைக் கொண்டுவந்தாரு.”

“இல்லை. நான் கேக்கறேன், இந்த நேரத்திலே, உங்க ரெண்டு பேரையும் தனியாக இங்கே கண்டா என்ன எண்ணுவாங்க. ஏண்டி வள்ளி! விலையாகிற பண்டமாச்சே நீ விஷயம் தெரிஞ்சா, எவண்டி உன்னைக் கட்டிக்கொள்வான்? இதோ போய், வீட்டிலே எல்லோரையும் எழுப்பி இங்கே கொண்டுவந்து உங்க ரெண்டுபேர் மானத்தையும் வாங்குகிறேன்.”