பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளி திருமணம்

35



“வள்ளி! இதென்னடி மாயம்! மரத்துக்குப் பின்னாலே போனவனைக் காணோமே” என்று அத்தை கேட்க, வள்ளியும் தேடிப் பார்த்துத் திகைத்தாள். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்குள். மரத்தின் கிளையிலே ஏறி, பக்கத்துத் தெருப்பக்கமாகக் குதித்து, அந்தத் தெருவைத் தாண்டி, கலியாண வீட்டுக்கு வந்து சேர்ந்த சிங்கார வேலன், பாகவதரின் பக்கத்திலே பரம சாது போல் படுத்துக்கொண்டான்.

“எங்கோ போய்விட்டான், கிடக்கட்டும். போய்ப்படு உள்ளே. சத்தியத்தின்படி அடுத்த மாசம் பழனிக்கும் உனக்கும் கலியாணம் தெரிஞ்சுதா. பாட்டி வேண்டான்னு சொன்னாக் கூட நான் பழனியைத்தான் கட்டிக்கொள்வேனென்று சொல்லணும் தெரியுமா? போ உள்ளே, படுத்துத் தூங்கு.”

“அத்தே! அவரு கூத்தாடுகிற வேலையை விட்டுட்டாப் போதும். அதிலேயும் பொம்பளை வேஷம் போடுகிறாரே அதுதான் கூடாது.”

“ஆகட்டும், சொல்றேன். ஆனால், அவன் பொம்பளை வேஷம் போட்டா, பேச்சு நடை இவ்வளவும் அசல் பொம்பளை போலவே இருக்கும்.”

வள்ளி சிரித்துவிட்டு, விட்டுக்குள் போய், பழையபடி படுத்துக்கொண்டாள், ஆனையைக் காட்டி அவன் கலியாணத்தை முடித்துக்கொண்டாள். அத்தை நமது அசட்டுத்தனத்தைக் கண்டு நம்மை மருமகளாக்கிக்கொண்டாள் என்று எண்ணினாள்; வள்ளிக்குச் சிரிப்பும் வந்தது. தூங்கும்போது கூட புன்னகை தவழ்ந்தது.

“தோட்டத்திலே, அத்தை, டோப்பா சேலை முதலிய வேஷங்களைக் கலைத்து, பழனியானான். “ஸ்திரீ பார்ட்டிலே திறமை இல்லையானால், நமது தாயாராகவே நடித்து வள்ளியிடம் சத்தியம் வாங்கியிருக்க முடியுமா” என்று