பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாமா விஜயம்

41


யாது விட்டதுமில்லை பார்ப்போம் அம்பிகையின் அருள் எப்படி இருக்குமென்று” என்பார்.

“நாளைக்கு நானும் உம்மபேருக்கு ஒரு இலட்சார்ச்சனை செய்யறதுன்னு நினைச்சுண்டே இருந்தேன்” என்பார் புரோகிதர்.

கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, “ஐயருக்கு வேண்டியதைக் கொடு” என்று சிங்காரவேலு பிள்ளை கூறிவிட்டு நல்ல மயிர் கறுக்கும் தைலம் எங்கு விற்கிறது என்ற ஆராய்ச்சியிலே இருப்பார்.

எப்படியாவது இந்த இரண்டு குடும்பங்களையும் பிணைத்துவிட்டால் தன்பாடு கொண்டாட்டம் என்பது, சாஸ்திரிகளின் எண்ணம். இரண்டு குடும்பத்திற்கும் ஏஜண்டாகவல்லவோ அவர் இருப்பார்!

ஒருநாள் மாலை சாஸ்திரியார் பாமாவின் தாயாருக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தார். ஜாதகப்பலனைப்பற்றி சரமாரியாகக் கூறிக்கொண்டிருக்கையில், பொல்லாதபாமா வந்துவிட்டாள் அங்கே. “உமது ஜாதகக் கணிதத்தில் கமலா கலியாணமான இரண்டாம் மாதம் தாலி அறுப்பாள் என்பது தெரியாமல் போனதே” என்று இடித்தாள். சாஸ்திரிகள் பச்சைச் சிரிப்புடன், “விதிவசம் அம்மா, ஆண்டவன் கூற்று” என்றார், “உமது மகளுக்கு நடக்கவிருந்த விபத்தையே உம்மால் கண்டுபிடிக்க முடியாத போது, என் ஜாதகப் பலனைப் பார்த்துச் சொல்ல வந்து விட்டீரே” என்று குத்தலாகக் கூறினாள் மங்கை.

“என்னமோ நடந்தது நடந்துவிட்டது, என் மகள் காலம் இப்போது ஏதோ, ஆண்டவனைத் துதித்துக் கொண்டு, சிவனே என்று காலந் தள்ளுகிறாள். அவளுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்” என்று சற்று வருத்தத்துடன் கூறினார் சாஸ்திரி.

“பாபம் கமலாவைப்பற்றி எண்ணினால் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது பெண்ணின் குணத்-