16
என்பதற்காக இந்தச் சர்க்கார் வழிவகுக்கிறார்கள். ஏனென்றால் சர்க்காருடைய அமைப்பே இப்படி இருக்கிறது" என்று சிறுநல்லூர் என்னும் சிற்றூரில் வினோபா அவர்கள் தம்முடைய பேருரையிலே குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இப்படி இந்தச் சர்க்காருடைய போக்கைப்பற்றி கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் வினோபா அவர்கள் இன்றையதினம் பெற்றுக்கொண்டு வருகின்ற நில தானம் நாங்களெல்லாம் கூர்ந்து பார்க்கத்தக்கது, ஆராயத்தக்கது என்று இந்தச் சர்க்கார் பெருமையோடு சொல்லிக்கொண்டாலும், உண்மையிலேயே வினோபா அவர்களாலே ஆற்ற முடிகின்ற இந்தக்காரியம் நாட்டை ஆளும் சர்க்காரால், நம்முடைய இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றிலேயே எந்த ஒரு கட்சிக்கும் இதுவரை ஏற்பட்டிராத அளவுக்கு செல்வாக்கைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் இந்தத் துரைத்தனம் ஏன் இந்தச் சீர்திருத்தத்தை செய்வதிலே தயக்கப்பட வேண்டும்? யாருக்காக அஞ்சுகிறார்கள்? யாராவது அவர்களுடைய கரங்களைப் பற்றிக்கொள்வார்கள் என்று கருதுசிறார்களா? என்று நான் இந்தச் சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்,
அதுபோல, எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களுடைய பொறுப்பையும், தாங்கள் அவசர அவசரமாகக் கவனிக்க வேண்டிய விஷயத்தையும் அவர்கள் உண்மையிலேயே செய்யத் தவறியிருக்கின்றார்கள், பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கின்றார்கள் என்று நான் குற்றஞ்சாட்ட விரும்புகின்றேன். அதனாலேயே, கொள்கை விளக்கம் இந்தக் கவர்னர் பேருரையிலே இல்லையோ என்று கூட நான் உண்மையிலேயே அஞ்ச நேரிடுகின்றது.
தொழில் துறையைப் பொறுத்தவரையில், உண்மையிலேயே ஆளும் கட்சியினர் எந்த வகையிலே எங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்றால், நாங்கள் அழிந்துவிடத் தக்கவர்கள் என்று சபிப்பதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, பொறுப்பற்றவர்கள் என்று எங்களைத் தூற்றுவதைப் பற்றி நாங்கள் உண்மையிலே கோபித்துக்கொள்ளப் போவதில்லை, ஏனென்றால், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லாத நிலையில், ஒருவரையொருவர் இப்படித் தூற்றிக்கொண்டிருப்பது பொது வாழ்வுத் துறையில் உண்மை-