பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஆட்சிக்கு கால் வருடியவர்கள். வெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் தாசர்கள்" என்று பழைய வார்த்தையை எடுத்துச் சொல்லும் நேரத்தில் என்னுடைய முகம் சுருங்கவில்லை; ஆனால். அவர்களுடைய முகம் சுருங்குகிறது (சிரிப்பு.)

இப்படிப் பழைய பரம்பரை பேசிக்கொண்டிருந்த ஜமீந்தார்கள், மிட்டாதார்கள், சிற்றாசர்களே தங்கள் பட்டம் பதவிகளை விட்டு வெளியேறும் இந்த நேரத்திலே, அரசியலில் மட்டும் இவர்கள் ஜமீந்தாரி முறையைக் கையாளுவார்களேயானால். இந்த ஜமீந்தாரி முறைக்கும் வெகு விரைவிலேயே இறுதிக்காலம் வரும் என்று நான் எச்சரிக்கின்றேன்.

தொழில் துறையைப் பொறுத்தவரையில், எங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆளும் கட்சிக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்றால், எங்களை ஆயிரம் தூற்றுங்கள்: அதற்காக நாங்கள் அங்கலாய்த்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்படி ஒரு கூட்டம் இருக்கிறதென்று எடுத்துச் சொல்லி, மத்திய சர்க்காரிடத்திலே வாதாடி. போராடி தமிழகத்திற்கு நம்முடைய ராஜ்ஜியத்திற்கு நல்ல உரிமைகளை வாங்கித் தாருங்கள். அந்த முறையிலே தொழில் துறையில் நாம் பின்தாங்கி இருக்கிறோம் என்பதை கனம் நிதி அமைச்சர் அவர்களுக்கு பல்வேறு கூட்டங்களிலே எடுத்து விளக்கியிருக்கிறோம். சென்னை சர்க்காருடைய ஆலோசனைக் குழுக்களும் பலதடவை எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

சட்ட மன்றத்திலே ஒரு காலத்தில் உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சராகவும் பணியாற்றியுள்ள திரு. ரோச் விக்டோரியா அவர்கள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு, இந்த விஷயத்திலே சொல்லும்போது இந்த வாசகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்:

"The Madras Government is, however, helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the polioy as to what should be done or what should not be done in the State of Madras. We are tied to the apron strings of the Central Government".

ஆங்கிலத்திலே உள்ள அந்த கருத்தை கொச்சைத் தமிழில் சொல்ல வேண்டுமென்றால்—கனம் சபாநாயகர் நான் குறிப்பிடும்