பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த இலாகா அவர்களிடத்தில ஒப்படைக்கப்பட்ட பிறகு தான் நான் சமுதாய நலத்திட்டத்தைப் பற்றி இருக்கின்ற பல்வேறு வகையான கருத்துரைகளைச் சேகரித்துப் பார்த்தேன். அப்படிப்பார்த்து, அவர்களுடைய கவனத்திற்கு உதவவேண்டுமென்ற எண்ணத்தில் எங்களுடைய கருத்துரைகளைத் தெரிவிக்க வேண்டுமென்ற எண்ணத்தாலும், இந்த சமுதாய நலத் திட்டத்தைப்பற்றி அதற்கு என்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிற அமெரிக்க நிபுணர்களில் டெபுடி டைரக்டராக அங்கே பணியாற்றுகிற பெர்நார்டு அவர்கள் "Commun'ty Development" என்பதை எவ்வளவு எச்சரிக்கையோடு எடுத்துச் சொல்லுகிறார் என்பதை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

Buildings can be seen but does this mean that the people themselves are aware of the opportunities for raising their standards of living? Model villages may be institued but does this mean what a process is under way in which the inhabitants of that village are working to improve even that model villagos? Are there more people who can read and write? Are there fewer cases of malaria or dysentry? Has infant morality been reduced? How much has the villager himself done to produce these results?

இவைகளைப் பார்த்துத்தான் சமுதாய நலத் திட்டத்தைக் கணக்கு எடுக்க வேண்டுமென்று டெபுடி டைரெக்டர் சொல்லியிருக்கிறாரே தவிர, சமுதாய நலத் திட்டத்தின் மூலம் எத்தனை பொலிக் காளைகள் வாங்கப்பட்டன, விதைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி அல்ல. அதே நேரத்தில் இதுவரையில் இந்தக் காரியம் சரியாக நடந்திருக்கிறதா என்பதைப் பற்றி டெபுடி டைரக்டர் கூறிய உரையின் பேரிலேயே மதிப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன்.

சமுதாய நலத்திட்டம் இதுவரையில் நடந்திருப்பதைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் கமிட்டித் தலைவராக இருந்து பணியாற்றிய டாக்டர் பி. கே. ஆர். ராவ் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்.

"குடிசைத் தொழில் அவ்வளவு பரவலாகவும் இல்லை வெற்றிகரமாக இருக்கிறதென்றும் சொல்ல முடியாது. முதியோர்