23
கல்வி, சுகாதாரம் ஆகிய அம்சங்களில் அவ்வளவாக வெற்றி காணப்படவில்லை. பொது மன்றங்களுக்குச் செல்வது, வாலிபர் கிளப்புகள், பெண்கள் ஸ்தாபனங்கள் இவைகளில் மக்கள் அவ்வளவாக ஈடுபாடு கொள்ளவில்லை. இருப்பதிலேயே மிகக் குறைவான வெற்றி காட்டும் அம்சம் இது தான். கடன் வாங்கும் வசதிக்குத் தவிர கூட்டுறவு ஸ்தாபன முறைகளிலும் மக்கள் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. இந்த அம்சத்தில் தோல்விதான் ஏற்பட்டுள்ளது, சுய முயற்சியில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தை கிராமங்களுக்கு ஏற்படுத்தும் முயற்சி, அவ்வளவாக வெற்றி பெறவில்லை கிராமப் பஞ்சாயத்துகள் விஷயத்திலும் இதே நிலைமைதான் இருக்கிறது. பஞ்சாயத்துகளின் நோக்கங்களையும் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை. திட்டமிட்டு கிராம அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளும் முன் முயற்சியும் காணப்படவில்லை"
மற்றொன்றும் சபாநாயகர் அனுமதியின் பேரில் சட்ட மன்றத்தின் கவனத்திற்கு எனக்கு இருக்கிற முழு ஆற்றலைக் கொண்டும் படித்துக்காட்ட விரும்புகிறேன்.
"அதிகாரிகளேகூட இந்தத் திட்டங்களின் தத்துவத்தைத் தெரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர். கிராம சேவகர்கள் (சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டிருப்போர்) கிராமங்களுக்குப் போவதேயில்லை. அப்படியே போனாலும் தங்களுக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர்களிடம் மட்டும் சென்று விட்டு வந்து விடுகிறார்கள். இவர்கள் அதிகாரிகள் போல் நடந்து கொள்கிறார்கள்."
இது இதுவரையில் நடைபெற்ற சமுதாய நலத்திட்டத்தைப் பற்றி எடுக்கப்பட்ட கணக்கீட்டின் மதிப்பீடு ஆகும். இதே முறையில் இந்த சமுதாய நல திட்டங்கள் இனியும் சென்று கொண்டிருக்காது என்பதற்கு ஒரே ஒரு உறுதி நமது முதல் அமைச்சர் அவர்கள் அந்த நிர்வாகப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டிருப்பதுதான். ஆனால் டெபுடி கலெக்டர் சொல்லியிருக்கக்கூடிய குறைகளை எல்லாம் களைவதற்கு முன்வராவிட்டால் அந்தத் துறையில் நாம் செலவழிக்கின்ற கோடிக்கனக்கான ரூபாய்கள் அத்தனையும் பாழ்பட்டு விடும் என்று நான் எச்சரிக்கிறேன்.
சமுதாய நலத்திட்டங்கள் அமெரிக்காவின் துணைகொண்டு இப்போது நாற்பத்தைந்து நாடுகளில், நடந்து கொண்டு வரு-