35
நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் வரி போடாமல் விட்டிருக்கின்றார். எங்களுக்குப் பயந்து அவர் வரி போடாமல் விட்டிருக்கின்றார் என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் அவர்களுடைய கட்சியிலே இருப்பவர்களில் ஒரு சிலர் அப்படிச் சொன்ன காரணத்தால், என்னுடைய கழகத்தைச் சேர்ந்தவர்களும். "ஆமாம், எங்களுக்குப் பயந்துதான்" என்று சொன்னார்கள். நிதி அமைச்சர் அவர்கள் வரிபோடாமல் இருப்பார் என்பதிலே எனக்கு உண்மையிலே நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அவர்களுடைய வாக்கியத்தை நல்ல தமிழில் எழுதியிருக்கிறார் என்று அங்கத்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். தமிழ் எப்பொழுதும் பொய்க்காது தமிழிலே இருக்கும் வாக்கியத்தைப் பார்த்தால், "இந்த எண்ணத்தில், எப்பொழுது எஞ்சிய பற்றாக்குறையை ஈடு செய்யாமல் தற்காலிகமாக விட்டுவிடுவது நியாயமாகும் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம்" என்று இரண்டு மூன்று ஆபத்தான பதங்களை மிக அழகாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக, பம்பாய் மாநில நிதி அமைச்சர் ஜிவராஜ் மேத்தா அவர்களும் இதைப்போல் துண்டுவிழுந்த பட்ஜெட்டை சமர்ப்பிக்கும்போது, 'என்னுடைய மாநில மக்கள் ஏகமாக வரி விதிக்கப்பட்டிருக்கின்றார்கள். புதிதாக மத்திய சர்க்கார் போட்டிருக்கும் வரியிலே பெரும் பாகம். அதாவது 40 சத விகிதம் வரை, என்னுடைய மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் என்று நான் அஞ்சுகிறேன். ஆகையால், வரவு செலவுத் திட்டத்திலே துண்டு விழுவதைச் சரிக்கட்டுவதற்கு நான், புதுச் செலவுத் திட்டத்திலே துண்டு விழுவதைச் சரிகட்டுவதற்கு நான், புதுவரித் திட்டங்கள் எத்தனையும் போடவில்லை," என்று காரணம் காட்டுகிறார்.
ஆனால், நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் காரணம் காட்டவில்லை—காரணம் காட்டாதது மாத்திரம் அல்ல—காரணம் காட்டியிருக்கிறார்களா என்று ஆவலோடு அலசிப் பார்த்தேன், காரணம் காட்டாததிலே ஒரு பயம் பிறந்தது. கடைசியில் பார்க்கும்போது, "எந்த எண்ணத்திலோ இப்பொழுது எஞ்சிய பற்றாக் குறையை ஈடு செய்யாமல் தற்காலிகமாக விட்டுவிடுவது நியாயமாகும் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்கள். அதில், "தற்காலிகமாக" என்று இருப்பதாலே "இந்த ஆண்டு தான் அங்கிருந்து விழுந்திருக்கிறது அடி, அந்த அடித்தழும்பே இன்னும் மறையவில்லை, அடுத்துத் துண்டு நான் தருகிறேன், அது