7
அல்ல, என அரசியல் அனுபவம் பெற்ற தாங்கள் நிச்சயமாக நன்கு உணர்ந்திருப்பீர்கள். அரசியல் துறையில் குழந்தைகளாக எதிர் வரிசையில் உட்கார்ந்திருக்கும் நாங்கள் இந்தச்சபையின் நடவடிக்கைகளில் சட்ட வரம்புக்கு உட்பட்டே செயல் படுவோம் என்றாலும் குழைந்தைத்தனமாக சில பல நேரங்களில் தவறுவதும் இயற்கை. அந்த நேரங்களில் தாங்கள் அன்புகூர்ந்து தங்கள் கட்டளைகளை புன்சிரிப்போடு கலந்து, கருணையிலே குழைத்து உபயோகிப்பது எங்களை எல்லாம் நல்ல ஜனநாயக பண்புடையவர்களாக்கப் பயன்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர் கட்சியில் அமர்ந்திருக்கிற நாங்கள், ஆளும் கட்சி செய்கின்ற காரியங்கள் அத்தனையையும் எதிர்ப்போம் என்று அல்ல ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் உள்ள உறவு. மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளைத் தோழர்களுக்கும் உள்ள உறவுபோல இருக்க வேண்டுமென்று கருதிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். சிற்சில நேரங்களில் மாப்பிள்ளை, தம்முடைய தோழர்களின் குறும்புகளை வெறுப்பது போல ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எங்களைக் கருதக்கூடும். அப்படிப்பட்டநேரத்தில், நாங்கள் மிகவும்சோர்ந்து போகாமல் இருக்க, தாங்கள் அருள் கூர்ந்து தங்களுடைய நியாயமான தீர்ப்புகளை வழங்கவேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் அ சியல் பெருந்தன்மை நம் நாட்டில் மிக மிக அவசியம் என்பதை நல்ல பெருந்தன்மை உடைய தகப்பனாருக்குப் பிள்ளையாயும், நல்ல பெருந்தன்மையுள்ள தொழிலில் ஈடுபட்டவராயும், அரசியல் பெருந்தன்மையை நிலை நாட்டும் பதவிக்கு இன்று தேர்ந்தெடுக்கப்பட்டவராயும் உள்ள தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.
அரசியல் பெருந்தன்மை, கொடுத்து வாங்குவது ஒன்றே தவிர ஒரே வழியில் செல்கிற வியாபாரம் அல்ல என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படி அரசியல் பெருந்தன்மையை கொடுத்து வாங்கவேண்டுமென்ற கொள்கையைத்தான் நாங்கள் கவலையோடு போற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தும் சில பல நேரங்களில் தவறுகள் இழைக்க நேரிட்டால், அரசியல் அநுபவம் இல்லாதவர்கள் நாங்கள் என்பதைக் கருத்தில்கொண்டு, தவறுகளைத் திருத்தி நல்வழிப்படுத்துகின்ற அதிகார பீடத்தில்