பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


நான் அதற்குப் பதில்தரும் வகையில் "அந்தச் செயல் அரசியல்சட்டப்படியும் தவறானது; அரசியல் சிந்தாந்தப்படியும் தவறானது; நெறிமுறைகளின் படியும் தவறானது என்பேன்!

மேற்கு வங்க அரசு கலைக்கப்பட்டது என்ற செய்தியைக்கேட்க நான் ஏமாற்றமடையவுமில்லை; அதிருப்தி. அடையவும் இல்லை, ஏனெனில் டில்லியின் போக்கை நான் உணர்ந்திருக்கிறேன்,

இந்தச் செயல் உலகுக்கு எதைக் காட்டுகிறது? இந்தியாவில் ஜனநாயகம் உயிர் வாழ்வதற்காக போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதைத்தான் மக்கள் ஆதரவைப் பெற்ற- மேற்கு வங்க அரசு கவிழ்க்கப்பட்டது நமக்கு உணர்த்துகிறது!

பொறுத்துப்
பார்ப்போம்

மேற்கு வங்கத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அங்கு அந்த அமைச்சரவையும் கவிழ்ந்தால் --குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படலாம்! அந்த ஆட்சிதான் எவ்வளவு காலத்திற்கு நிலைத்துவிட முடியும்? ஆறு மாதங்கள்- அல்லது ஒரு வருடம் இருக்கலாம்! அதற்குப் பிறகு...?

மக்களிடம் வந்துதானே ஆகவேண்டும்? உன் கொள்கைகளுக்கு - நடவடிக்கைகளுக்குத் தீர்ப்புத் தர வேண்டி சந்தைச் சதுக்கத்திற்கு நீ வந்துதானே ஆகவேண்டும்!

நான் வங்கத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? சரி; வரட்டும் மற்றொரு அமைச்சரவை! - என்று விடு-