பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


கல்லூரிக்காகக் கொடுத்து உதவியது எல்லோராலும் பாராட்டத்தக்கதாகும். அவருடைய சட்ட நுணுக்க ஆராய்ச்சியும் தெளிவும் கனிவும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மிகநல்ல முறையில் விளங்கும். கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அரசினர் காட்டிவரும் அக்கறையோடு எத்திராஜ் போன்றவர்களும் கொடுத்து உதவிய பெருநிதியால்தான் தமிழகத்தில் இது போன்ற பல அறிவாலயங்கள் உருவாக முடிந்தது.

ஆடவர்களைவிட ஆரணங்குகள் கல்விபெறுவதால், ஒரு குடும்பத்தையே சிறப்பாக்கும் பணியை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஒரு கல்லூரிக்குக்கிடைக்கும் நல்ல பெயர், அந்தக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறமையைப் பொறுத்துத் தான் இருக்கிறது.

கல்வியில் முன்னேற்றமடையாவிட்டால், நாடு முற்போக்கை அடைய முடியாது. மாணவிகள் கல்வியில் தேர்ச்சிப் பெற்று நாட்டுக்கும் ஏற்றத்தைப் பெற்றுத்தருகிறார்கள். இங்கே பயிற்சி பெற்ற மாணவிகள் தனித்திறமையோடு விளங்குகிருர்கள் என்பதைக் கல்லூரி முதல்வர் எடுத்துக் கூறினார். மகளிர் குலத்திற்குத் தெளிவும் கனிவும் ஆகிய இரண்டும் இயல்பாக அமைந்திருக்கின்றன. அதை இன்னும் சற்று வளர்த்துக்கொள்வதற்குக் கல்வித் துறையில் மகளிர் ஈடுபடுவது இன்றியமையாதது ஆகும். அப்போதுதான் அவர்கள் பெற்ற தெளிவும் கனிவும் சமூகத்திற்கு மிகுந்த பயன்தரும். ஆகையால் தான் ஒவ்வொரு பெற்றோரும் பெண் குழந்தை