பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


நிற்கும் அவர்களைக் காணும்போது, உள்ளத்திலே எழும் உணர்ச்சிப் போராட்டங்கள் ஏராளம். என்ன செய்வது ? அவர்கள் குறைகளைச் சுமக்கும் சுமை தாங்கியாகவே நாம் இருக்க முடியும். தவிர, நாமென்ன கற்பக விருட்சங்களுமல்ல; மணிமேகலை ஏந்தியிருந்தாளாமே அட்சயப்பாத்திரம் அது பெற்றவர்களுமல்ல. அதனால். ஆயாசம் அடைவோம் அவர்களைப்போல. இந்த ஆயாசத்தைத் துடைக்கும் நல் உள்ளத்துடன், அதே நேரத்தில் அந்த நடிகமணிகளின் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டுமென்கிற ஆசையுடன் நண்பர் எம்.ஜி.ஆர். தமது அண்ணன் எம். ஜி. சக்ரபாணி அவர்களின் ஒத்துழைப்போடு, நடிகர் மன்றம் ஒன்றை நிறுவி, நாடகங்களை நடத்த முன்வந்திருக்கிறார். நற்பணியின் முதல் சித்திரம் " இன்பக்கனவு ".

நண்பர் இராமச்சந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். அவருடைய நடிப்பையும் நாடகத்தையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகவே கருதப்படும். உண்மைதானே எம். ஜி. ஆர். என்றால் அவர் தாங்கியிருக்கும் கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும் ?

கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றக் கொள்கைகளை முரசொலிக்கும் ஆவல் எங்கும் பரவியிருக்கிறது ! இதனை நாடகங்கள் மூலமாகக் செய்ய வேண்டும் என்கிற ஆவல் சிறு குக்கிராமங்களில் கூடப் பரவியிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு யார்