பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 தமிழக மக்களின் பரிபூசண நம்பிக்கைக்கு ஆளாகி இருக்கிறோம் நாம். சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசுக் கட்சியை மக்கள் எப்படி நம்பினார்களோ, அப்படியே நம்மை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சிலரைத் தவிர, மற்ற அனைவரும் இளைஞர்கள். புதிய தலைமுறையினர் பொறுப்பு ஏற்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

இங்கே அறிமுகப்படுத்திக் கொண்ட நண்பர்கள், தங்கள் படிப்பு என்ன என்பதைச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பட்டதாரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆசிரியராக இருந்தவர்கள் இருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்களாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். நிர்வாகத் துறையில் நன்கு அனுபவப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பொதுவாகத் தி. மு. க. வைப் பற்றிச் சமுதாயத்தில் ஒரு நிலையில் உள்ளவர்களிடம் தவறாண எண்ணம் இருக்கிறது. தி. மு. க. என்பது வெறிபிடித்து அலையும் படிக்காதவர் கூட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

தி.மு.க. படித்தவர்களின் பாசறை. தி. மு. க. -படிக்காதவர்களுக்கும் அது பாசறை. தி.மு.த.அது பாமரர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் இடம். கற்றறிவாளர்களும் தி. மு. க. வில் உண்டு. சமுதாயத்தின் எல்லாப் பகுதியினரும் இங்குண்டு.