பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 நம்முடைய ஏழ்மைத் தோற்றத்தைக் கண்டு, படிக்காதவர்கள் என்று சிலர் எண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் மற்றவர்கள் ஒத்துழைப்புடன் ஆளுவோம். எந்தவிதமான தனிப் பட்ட விரோதமும் யாரிடமும் கிடையாது. மற்றவர்களுடன் தோழமையுடன் நடந்து கொள்வோம்.

காங்கிரசு நண்பர்களிடமிருந்தும் நான் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். அதிகாரத்தில் அவர்கள் இல்லாவிட்டாலும் தங்களுடைய ஆலோசனைகளை அளித்தால் ஏற்றுக்கொள்வோம்.

2

1957-ம் ஆண்டில் நான் காஞ்சிபுரம்தொகுதில் தேர்தலில் நின்றபோது, என்னை இராஜாஜி சந்திக்க விரும்பினார். ஒரு நண்பர் வீட்டில் நாங்கள் சந்தித்தோம். "நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரே ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்த வகுப்பார் மீதும் எனக்குத் துவேஷம் கிடையாது என்றோர் அறிக்கை வெளியிட வேண்டும் ” என்று இராஜாஜி என்னைக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு நான், " என்னால் முடியாது, " என்றேன். என்னை ஆச்சரியத்தோடு இராஜாஜி பார்த்தார். "நான் இப்படி ஓர் அறிக்கையை இப்பொழுது விடுத்தால், இதுவரை நான் வகுப்புத் துவேஷம் பாராட்டியதாகப் பொருள்படும். நான் எப்போதுமே