பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 'நாம் தமிழர்' கட்சித் தலைவராக இருந்த ஆதித்தனார் தி. மு. கவிலே சேர்ந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பே தம் விருப்பத்தை அவர் எனக்குத் தெரிவித்தபோது, தேர்தல் நேரத்தில் வெளியிட்டால், "ஒட்டு வாங்குவதற்காகச் சேருகிறார்.” என்று சொல்வார்கள் என்று நினைத்துத் தான் நான் அப்பொழுது தெரிவிக்கவில்லை.

ஆதித்தனரும் நாம் அனைவரும் தமிழர்கள் என்று நினைத்து நம்முடன் சேர்ந்துவிட்டார்.

3

நான் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்காரர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வோம். அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்படும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். என்னைச் சந்தித்த பி. பி. சி. வானொலி நிலையத்தைச் சேர்ந்த நிருபர், வெளிநாட்டு நிருபர்களுக்கே உரிய வாக்குச் சாதுரியத்துடன், "காமராசர் பிரதமர் மந்திரியாகத் தகுதி உண்டா? அதை விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.

“நிச்சயம் தகுதியுண்டு. நான் அதை விரும்புகிறேன்”, என்று பதில் சொன்னேன்.

தில்லியில் நான் பேசும்பொழுதுகூடத், "தென்னாட்டுத்தலைவர்களுக்கு வடநாட்டில்மதிப்புத்

F– 2