பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அனைத்திந்திய அடிப்படை



தமிழுக்கு உரிய இடத்தை நாம் அளித்து வருகிறோம். தமிழகத்தின் எதிர்காலம் ஒளி நிரம்பியதாக இருக்கும்.

வழக்கு மன்றங்களிலே தமிழைப் பயன்படுத்திச் சட்ட நுணுக்கச் சொற்களைத் தமிழில் ஆக்கித்தந்த குழுவினருக்கு எனது பாராட்டுதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். "அனைத்திந்திய அடிப்படையில் சட்டச் சொற்கள் அமைக்கப்பட வேண்டும் ” என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தி வருவதையும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் இங்குக் குறிப்பிட்டார்கள். கல்வியமைச்சர் அவர்கள் கூட அதனை எடுத்துரைத்தார்.

அந்தந்த மாநிலங்களின் தனித் தன்மையைக் கெடுக்கும் வகையில் அனைத்திந்திய அடிப்படை அமைந்தால், கெடுதல்தான் ஏற்படும். பொதுவாக, இதைப்பற்றி எல்லோரும் எடுத்துப் பேசமாட்டார்கள். ஒருவகையான அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.

என்னைப்பற்றி இதை விடப் பெரிய அச்சம் வெளியே எழுப்பப்பட்டிருப்பதால், நான் ஒளிமறை வின்றிச் சொல்கிறேன். இங்கே தமிழ் மொழியில் சட்டச்செல்லாக்கம் செய்வதுபோல், அனைத்திந்திய அடிப்படையில் சொற்களை அமைக்க ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். நமது மாநிலத்தைச் சேர்ந்த வர்கள்கூட இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.