பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


வெளிநாட்டில் அதிக அளவுக்கு நமது பொருள்களுக்கு விளம்பரங்கள் செய்யவேண்டும். மத்திய அரசு விளம்பரத்துறை இதைக் கவனிக்கவேண்டும். ஏற்றுமதியை அதிக அளவில் செய்து வெற்றி பெற்றவர்கள், மீண்டும் அடுத்த ஆண்டும் பரிசுகளைப் பெறவேண்டும். அதே போல, மற்றவர்களும் பரிசுகளைப்பெற முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாணய மதிப்புக் குறைப்பினால் நமது ஏற்று மதியின் அளவு உயரவில்லை. ஏற்றுமதி மதிப்பு குறைந்ததுதான் மிச்சம்.

இந்தியாவுக்கும், முற்போக்குள்ள நாடுகளுக்கு மிடையே ஏற்றுமதித் தொடர்பான நிலைகள் நல்ல வாய்ப்பாக உருவாகவில்லை. ஆகையால் ஆசியாவில் பொதுச் சந்தையை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகள் வரியையும், மற்றக்கட்டுப்பாடுகளையும் குறைத்து இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்,

வகைப்பாடு :பொருளாதாரம்:ஏற்றுமதி இறக்குமதி

.

19-4-67 அன்று சென்னையில் அதிக ஏற்றுமதி, இறக்குமதி செய்தவர்களுக்கு அளித்த கேடய வழங்கு விழாவில் ஆற்றிய தலைமை உரை.