பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. மாமனிதர் மகாவீரர்



வேலூரில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஒய்வுபெற்ற காலத்தில், தாயகம் செல்லவிருந்தபொழுது. வழியனுப்பு விழாவிற்கு என்னையும் அழைந்திருந்தார்கள். எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து - வேற்று நாட்டுக்காராக இருந்தாலும் - விழுமிய தொண்டராகப் பிறர் பயனடைய மருத்துவ நிலையங்களையும் கல்விக்கூடங்களையும் அறமனைகளையுங் கட்டித்தந்து பணிபுரிந்தவராயிற்றே என்னுங் கருத்தில் அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிறித்துவரை வழியனுப்பச் சென்றேன். அப்போது வேலூரிலிருந்து இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. , 'கிறித்துவரை வழியனுப்பும் விழாவில் கலந்து கொள்ளவந்தால் நாங்கள் கறுப்புக்கொடி காட்டுவோம் ” என்று அந்தக் கடிதத்திலே எழுதி இருந்தது. எங்கள் கட்சிக்கொடியிலே கறுப்புத் தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கை யாகச் சொன்னேன்.

எவ்வளவோ தொலைவிற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும், அயலவர்கள் என்றாலும், அவர்கள் செய்த நல்ல செயலைத் தமிழக மக்கள் வரவேற்கவேண்டும். அது போன்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.