பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை. காரணம் நாம் சொல்பவர்களாகவே இருந்தோம். செய்யத் தவறி விட்டோம். ஆகவே, இனிமேல் சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.

"புத்தர் சொன்னார், சித்தர் கூறினார் மகாவீரரும் முகமது நபியும், காந்தியடிகளும் இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் " என்றுதான் சொல்கிறோமே தவிர, அவற்றைச் செய்து காட்டுகின்றோமா ?

" அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார்" என்று கூறிவிட்டு, "நீ என்ன செய்யப் போகிறாய்?" என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கிறோம், ஆகவே, சொல்வதோடு மட்டும் நில்லாமல், செய்தும் காட்டவேண்டும். அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்.

மகாவீரர் போன்ற உயர்ந்த மேதைகளை நாம் பின்பற்றிச் செல்லவேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஜைன விதியை நல்லமுறையில் பாதுகாத்து, அந்த நெறியிலே நடப்பது மட்டுமல்லாமல், மற்றச் சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்கவேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்ற உங்களைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும். நல்ல நெறிகளாகும். "ஐம்புலன்களை அடக்கு பொருள்களின்மீது மிகுதியாக ஆசை