பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


வைக்காதே". என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கின்றேன். இந்த உண்மைகளை எல்லாம் உண்மையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பாரேயானால் சண்டை ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப்பட்டிருக்காது.

மனித சமுதாயத்தை வழிநடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக்கட்டிடங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத் தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால்: தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும் பழக்கமும் உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவாதித்து இருக்கிறோம். அப்போது நான் வகுத்தப்பட்டதுண்டு. நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல. இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்துகொள்ள வில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த அறநெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்னுங் குறை இருப்பதால், அந்த நெறிகளே எல்லாம் மறந்துவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.

ஆண்ட அரசர்களையும், அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும், பெரும் பணக்காரர்களையும், சிரமப் பட்டுப் பிழைத்த ஏழைகளையும், உயர்ந்தோர் எனச்