பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 உடையைப் பார்க்கின்றார்கள், கடன் கேட்பவரின் இதழ்களில் உள்ள புன்னகையின் மதிப்பைப் பார்க்கின்றார்கள்! தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நாம் எதிர்பார்த்ததை ரிசர்வ் வங்கி கொடுப்பதில்லை, நமக்குச் சாதகமாக அது இல்லை! வகைப்பாடு: பொருளாதாரம்-தொழில் திட்டங்கள். 24-4-67 அன்று சென்னைத் தேசிய வணிகக் கழகத்தில் தலைமை தாங்கி ஆற்றிய உரை.

9. மாநில மைய அரசு உறவுகள்

மாநில மத்திய அரசுகளின் தொடர்பு பற்றி இங்கே விவாதிக்கப்பட இருக்கிறது. "தொடர்பு" என்பதே 'நீக்கப்பட முடியாதது, இருந்து தீர வேண்டியது' என்றுதான் பொருள் தரும். இல்லையென்றால் இருவருடைய தொடர்பு ஒருவருக்கு மட்டுஞ் சொந்தமாக மாறிவிடும், ஆகையால், மாநில-மத்திய அரசுகளின் தொடர்பு பற்றிய சிந்தனை, விரிவாகப் பரந்து காணத்தெளிவான கண்ணோட்டத்தைப் பெறவேண்டும்.