பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. தொழில் வளச்சியும் ஒருமைப்பாடும்


இந்தப் பிளாஸ்டிக் தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலைத் திறப்புவிழாவில் முதலமைச்சர் என்னும் முறையில் பங்குகொள்ளும் நான் மகிழ்ச்சி அடைந்தாலும், நிதியமைச்சர் என்னும் முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழகத்தின் நிதி நிலைமை என்னைப் போல உயரக் குறைவாக இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சி, நம்முடைய தொழிலமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களைப் போல உயரமாக இருக்கிறது.

தமிழகத்தின் தொழில், வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றாலும், அது மேலும் வளர்ச்சியடைய வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடையத் தொழில்கள் பெருக, நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் வகுக்கப்படும் என்பதை இங்கே வந்திருக்கும் திட்ட அமைச்சர் அசோக் மேத்தா அவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நம் நாட்டின் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி உணவுக்காகவே செலவாகிறது. தொழில்கள் பெருக வேண்டுமானல், ஏழை மக்களுக்குக் குறைந்த