பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



39


விலையில் கிடைக்கும் அளவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும், தொழில் துறையில் அக்கறையுள்ளவர்கள் முன்வர வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் தயாராகும் பொருட்களை உருவாக்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள் அடிக்கடி தீப்பிடித்துக் கொள்கின்றன. அதனால், பிளாஸ்டிக்கிலான கூரைகளே வீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

புது தில்லிக்கு நான் சென்றிருந்தபொழுது, முழுவதும் பிளாஸ்டிக்கிலான வீட்டைப் பார்த் தேன். அந்த வீட்டின் எல்லாப் பகுதிகளும் – அலமாரியில் இருந்து ஒவ்வொரு பகுதியும் – பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருந்தன. கடையில் அந்த வீட்டின் விலை என்னவென்றபொழுது, 47,000 ரூபாய் என்று சொன்னர்கள். அது மிகவும் அதிக மாகும். ஏழை மக்கள் பயன்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைகள் முழுவதும் மாறிவிட்டன. நாட்டின் தொழில் வளர்ச்சியில் நல்ல அக்கறை ஏற்பட்டு உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ககாலை “எதற்கோ பயன்படும்” என்று நினைத்தோம். ஆனால் ஆல்காலையும் குளோரினையும் பயன்படுத்தி இப்போது பிளாஸ்டிக் தயார் செய்கிறோம்.

கடந்த பத்தாண்டுகளில் புதிய தலைமுறையினரின் கடின உழைப்பு, நாட்டின் பொருளாதார, வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.