பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 போடுகின்றேன். தமிழக அர சு க்கு இருக்கும் தொல்லைகள் அகன்றதும், திரைப்படத் தொழிலே வாட்டும் வரிகளைக் குறைப்போம். திரைபடத் தொழிலின் குறைகளை நான் மிகவும் நன்ருக அறிந்தவன். தமிழ்த் திரைப்படங்களுக்கு மாநில அரசு பரிசு கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று கூறப்படு கிறது. அதைச் சுணக்கம் இல்லாமல் செய்வோம். ஆல்ை அப்படிப் பரி சு பெ ற் ற படங்களுக்கு இப்போது வரிவிலக்கு அளிக்கமுடியாது. மகாபலிபுரத்தில் படம்எடுக்க ஏராளமான பணம் வசூலிக்கப்படுகிறது. அந்த உரிமை மைய அரசிடம் உள்ளது. அது தமிழக அரசுக்குக் கிடைத்தால், கட்டணத்தை திண்ணமாகக் குறைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தணிக்கைக் குழுவிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். வெட்ட வேண்டியதை வெட்டாமல் விடுகிருர்கள். வெட்டக் கூடாததை வெட்டித் தள்ளுகிருர்கள். இந்நிலை மாறவேண்டும். வரியைக் குறைப்பதால் மட்டும் திரைபடத் தொழில் வ ள ர் ந் து விடாது. பதினேந்தாயிரம், இருபதாயிரம் என்று படப்பிடிப்புக்குச் செலவழித்து விட்டு, நடிகர் களுக்காக க் காத்திருக்கிருர்கள். நடிகர்கள் வரவில்லை என்ருல், செலவழித்த பணம் வீணுகிறது. இதுபோன்ற செலவுகளை எல்லாம் குறைக்கவேண்டும்,