பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48


நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒரு பேராசிரியர் வந்ததும், பாடத்துக்குக் குறிப்புகளேக் கொடுப்பார். அதை அப்படியே எழுதி மனப்பாடம் சேய்து தேர்வு எழுதுவார்கள். நான் எழுதாமல் உட்காட்ந்திருந்தேன். ஆசிரியர் ஏன் எழுதவில்லை ?’ என்று கேட்டதும், நீங்கள் எழுதியதை படித்தால் 40 மதிப்பெண் கிடைக்குமென்றால் நானாக எழுதினால் அதைவிட அதிகமாகக் கிடைக்கும்’ என்று பதில் சொன்னேன். அதைப் போலவே அந்த ஆண்டு நம்முடைய மாநிலத்தில் நான் முதல் மாணவன் என்னும் பரிசைப் பெற்றேன்.

பரிசு பெற்றதும் அந்த ஆசிரியரிடத்திலே போய்ப் "பார்த்தீர்களா ? நானாகப் படித்ததன் விளைவு " என்று கூறினேன். அதை அப்படியே எல்லோரும் கையாள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும். சோர்வடையக் கூடாது. இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாம் பார்க்க முடியும்.

தமிழில்தானே கண்ணகி வாதாடினாள். அவள் கூறிய வாதங்களே ஆங்கில மொழியாலும் அளிக்க முடியாது. அரசர் ஆணைகளைத் தமிழில்தானே பிறப்பித்தார்கள்.

நாம் புதியதாக எதையும் செய்ய வேண்டியதுமில்லை. இழந்ததைப் பெற்றால் போதும். ஆப்பிரிக் கண்டத்தில் விடுதலை பெற்ற நாடுகள் புதிய