பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

சமுதாயம் பாராட்டத் தவறக் கூடாது என்பதைக் காமராசர் படத்திறப்பு விழா உணர்த்தும் என்று நம்புகிறேன்.

வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு - நல்லறிஞர்

22-4-67 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் காமராசர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய தலைமை உரை.

————


14. பொன்னியின் செல்வி

—————

சந்திரகாந்தாவின் இரண்டாவது நாட்டிய நாடகமான இந்தப் பொன்னியின் செல்வி அளித்துள்ள இலக்கிய விருந்து மிகச் சிறப்பாக உள்ளது. இலக்கிய நாட்டிய நாடகத்திற்குச் சிறப்பாகப் பயிற்சி தந்த திரு. இராலால் அவர்களைப் பாராட்டுகிறேன். அதே போன்று இக்கலை வளர்ச்சியில் ஆர்வ ம் காட்டிய அத்தனைப்பேருக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழைய இலக்கியக் கருத்துக் கருவூலத்தை மனத்தில் கொண்டு கற்பனையில் தோன்றியவைகளையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் ' பொன்னியின் செல்வி ' என்று நாட்டிய நாடகமாக அமைத்திருக் கிறார்கள். இப்படி எல்லோரும் கண்டு பாராட்ட