பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வகை செய்யாமல், ஏட்டளவிலே எழுதி-வீட்டிலேயே உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தால், அது அத்தனைச் சிறப்பாக யாருக்கும் தெரியாது.

இந்த நாட்டிய நாடகம் நல்ல உயிர்ப்புச் சக்தி கொடுத்துத் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இலக்கிய காலத்தில் வாழ்வது போன்றதோர் உணர்வு இத்தனை நேரம் இங்கே நிலவி இருந்தது. இந்த நாட்டிய நாடகம் சிறந்த கருத்துக்களைக் கருவூலமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. மேனாட்டுக் கலை விற்பன்னர்கள் கண்டு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்து இருக்கிறது.

சந்திரகாந்தாவைச் சிறுவயது முதலே, சிறுகுழந்தையாக இருந்தபோதிருந்தே எனக்குத் தெரியும். இன்றைக்கு இந்த அளவிற்குக் கலை ஆர்வத்தால் நல்ல முறையில் வளர்ந்திருப்பதைக் காணும்போது மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தின் பல்வேறு நாட்டவர்களும், நமது தமிழகக் கலையை அன்று முதலே பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையிலே, இந்த நாட்டிய நாடகமும் அயல் நாட்டவர்களால் பாராட்டத்தக்க அளவில் மிக நன்றாக அமைந்து இருக்கிறது.

எனவே, சந்திரகாந்தா திறம்பட இலக்கியக் கலை ஆர்வத்தைக் காட்டியிருக்கும் இந்த நாட்டிய நாடகத்தைச் சென்னையில் விரைவில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெறச் செய்வேன். தமிழக அரசு அதற்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி