பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கூறுகிறேன். சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் இயல், இசை, நாடகம் ஆன முத்தமிழும் இடம் பெறும்.

அதில் உலகத்தவரே கண்டு வியக்கும் வகையில், பாராட்டும் வகையில் இந்த நாடகத்திற்கு மெருகு ஏற்றிப் பண்பு பாழ்படாமல் கருத்துடன் அமைந்திருப்பதால் வெற்றிபெறத்தக்கதாக அமையும் என்று நம்புகிறேன்.

தமிழக அரசினுடைய எல்லா வளமுமே இன்று காவிரி ஆற்றில்தான் இருக்கிறது. உள்ளபடியே காவிரி ஆற்றின் அழிக்கும் சக்தியைவிட, ஆக்கும் சக்திதான் அதிகம். எங்கே கணவனுக்காகக் கதறி அழும் காரிகையின் வாழ்வையும் பறிக்கின்ற வகையிலே காவிரியும் ஆட்டனத்தின் உயிரைக் காப்பாற்றித் தராமல் அழித்து விடுவதுபோல் கதை அமைந்து விடுகிறதோ என்று யோசித்திருந்தேன். நல்லகாலம் ; காவிரி ஆறு அனைவரையும் காப்பாற்றி விட்டிருக்கிறது, இலக்கிய வரலாற்றிலேயே! எனவே நம் தமிழக மக்களையும் காவிரி காப்பாற்றும் !


வகைப்பாடு : கலை - நாட்டியம்.

15-5-67 அன்று சென்னையில் பொன்னியின் செல்வி நாட்டிய நாடக அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.

————