பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59

2

மேலைநாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளைக் கழித்துவிட முடியும். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு. இங்கோ ஒர் ஆசிரியர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் என்றாலே வீடு மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கு அவர் பட்டகடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சித் தென் சென்னையில் வீடு இருந்தால், வடசென்னைக்கும் வடசென்னையில் வீடுஇருந்தால் தென்சென்னைக்கும் குடிபோவார். அப்படிப்பட்ட நிலை இங்கிருக்கிறது. இங்குப் புத்தம் எழுதுவதும் அதன்மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்.

புலமைக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பினை அருள் துறையில் தேர்ச்சி பெற்ற குன்றக்குடி அடிகளாரே சொன்னது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் சொன்னபடி நாட்டில் நிலைமை ஏற்பட்டிருந்தால், நாம் இன்னும் பயனைச் சற்று அதிகமாகப் பெற்றிருக்க முடியும்.

புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். அப்பாத்துரையாரின் நூல்களை ஏடுகளை வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில், தென்னாட்டுப் போர்க் களங்கள் என்னும் நூல் என்னை மிகவும், கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஒரு ஏட்டை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்கவேண்டும், எத்தனை ஆயிரம்