பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாவின் பேச்சு - ஓர் ஆய்வு

1. பொருள்


இந்நூலின்கண் உள்ள தலைமை உரைகள் 28-இல் முதல் பேச்சு இன்பக்கனவு. இறுதிப் பேச்சு திறமைமிகு தமிழ்நாடு காவல் படை. இவற்றில் கலை, அரசியல், ஜனநாயகம், பொருளாதாரம், வரலாறு, தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, கல்வி, நாட்டுப் பிரச்சனைகள் முதலிய பொருள்கள் பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றன,

அண்ணா கருத்துப்படிக் கலையும் அரசியலும் கைகோத்து செல்பவை, சமூகத்தை உயர்த்துபவை.

தி. மு. க. ஆட்சிக்கு வந்த நிலையில், அதிகப் பொறுப்புணர்ச்சி அதற்குத் தேவை. எதிர்க் கட்சியின் ஒத்துழைப்போடு மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்சி வேறு அரசு வேறு என்ற நிலையில், அது பாடுபடவேண்டும். என்பது அண்ணா துணிவு.

மொழிப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, மது விலக்குப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. பிரச்சனைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தீர்வு காண்பதைத் தலைவர்களிடமும் அரசிடமும் விட்டுவிட வேண்டும். கலந்துரையாடலே பிரச்சினைக்கு ஏன்றும் நிலையான தீர்வு காணும் முறை என்பதையும் அண்ணா வற்புறுத்திச் சொல்கின்றார். ஏனெனில், அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆசிரியர்கள் அளிக்கும் செல்வம் அறிவுச் செல்வம். ஆகவே, அவர்கள் சிறப்புடையவர்கள், அனைத்திந்திய அடிப்படை எங்கும் எதிலும் இருக்கத் தேவை இல்லை, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை உயர்த்தி நாட்டின் பொருள் வளத்தைப் பெருக்கவேண்டும் என்பவை அண்ணாவின் உயர்ந்த கருத்துக்கள்.