பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இப்போதும் மதுபான வகைகளுக்கு அனுமதி கேட்டு எங்களிடம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் குறும் புடன் சிரித்தது வேடிக்கையும் விஷமும் கலந்து கேட்கிறார்கள் மதுவிலக்கா - சென்னையிலா ? ஆந்திரத்தில் இல்லையே. மராட்டியத்தில் கிடை யாதே, ஏன் இங்கே மட்டும் எனக்கேட்கிறார்கள்.” உண்மையாகச் சொல்லுகிறேன். இ ந் த இடத்தில் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. எனவேதான் சொல்லுகிறேன். இங்கே மது விலக்கு பற்றி ஆணித்தரமாக அழகாகப் பேசிய நண்பர் செங்கல்வராயன் தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்கூட அல்ல, ஒரு காங்கிரசுக்காரர் என்ற அடிப்படையில் இச்சிக்கலை அந்த மன்றத்திற்கு எடுத்துச்செல்லட்டும். கிடைக்காத அ டு த் த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில், ' காங்கிரசல்லாத ஒரு மாநில முதலமைச்சர் மது விலக்கில் இப்படிப் பிடி யாக இருக்கும் பொழுது, காந்திய வாதிகளாகவும் இருக்கும் காங்கிரசுக்காரர்கள் ஏன் மதுவிலக்கைச் செயற்படுத்த வில்லை ” என்று கேட்டுத் தீர்மானங் கொண்டு வந்து கலந்துரையாடட்டும். அதில் அவர் வெற்றிபெற்றால் அவரை நாடே பாராட்டும். அவர் அதில் தோல்வியுற்றால் கூட அவர்மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகமாகும். வேறு எந்தக் காங்கிரசுக்