பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அரசியல் நிஜ உருவத்தில் இருப்பது, கலை என்பது உடனடித் தேவைகளுக்காக இயங்குவது. அரசியல் என்பது நீண்டகாலத் தேவைகளுக்காக இயங் குவது. ஆகவே, கலையும், அரசியலும் பின்னிப் பினைந்தவை. இதை உணர்ந்த பிறகும், “கலையில் அரசியல் வரலாமா ? அரசியலில் கலை புகலாமா? என்று கேட்பது 18 வது நூற்ருண்டின் கருத்தாகத் தான் இருக்கமுடியும். நாம் அறிந்த அரசியல் தலைவர்களின் கலை ஈடுபாடு கண்டு நாம் தெளியவேண்டும். இரண் டாம் உலகப்போர் நடைபெற்ற வேளையிலும் கூட ஒய்வு கிடைக்கும் போது வின்ஸ்டன் சர்ச்சில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிருர். மேலும் உலகத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதியான ஆப்ரகாம்லிங்கன் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டிதநேரு இங்கிலாந்து செல்கிறபோது, அங்கு நடக்கும் புகழ்மிக்க நாடகங்களைப் பார்ப்பது வழக்கம்! தமிழகத்தில் அரசியல் உணர்வை ஊட்டிய சத்தியமூர்த்தி அவர்களுக்குச் சங்கீதம், நடனம் ஆகியவற்றில் பெருவிருப்பம் இருந்ததோடு, நாட கத்தில் அக்கறை கொண்டதோடு சில நாடகங் களில் பங்கோற்று வேடமும் தாங்கி இருக்கிருர். ஆகவே. கலேயும், அரசியலும் இணையக்கூடாது. என்பது சரியல்ல. கலையிலும், அரசியலும் சரியான படி இருக்க இயலாதவர்கள்தான் அப்படிக் கூறு வார்கள்.