பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தேவை தொழிலமைதி - விவசாயத் தொழிலுக்கு முக்கியமான சாதனை ஒன்றைச் செய்து முடித்த கிர்லோஸ்கர் நிறுவனத் தார் அ ந் த ச் சாதனையைப் பதிய வைத்திட நடத்தும் இவ்விழாவுக்கு என்னே அழைத்திருக் கிருர்கள். இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடை கிறேன். கிர்லோஸ்கர் நீண்ட பல ஆண்டுகளாக மிகுந்த சகிப்புத் தன்மையோடும் அயரா உழைப் புடனும் இந்த நாட்டின் விவசாயத்தை ஒரு முற் போக்கான தொழிலாக ஆக்கிடப் பாடுபட்டிருக் கிருர்கள். வேளாண்மைத்துறை அமைச்சர் இங்கு ப் பேசுகையில் அயல்நாடுகளில் தயாரான எந்திரங் களையே நம்மவர்கள் விரும்புகிருர்கள் என்று சொன்னர். இதற்குக் காரணம் வழக்கமோ அல்லது மக்களிடையே வளர்ந்துவிட்ட மனப்போக்கோ அல்ல. அந்த அந்நிய எந்திரங்கள் நன்ருகவே பணியாற்றும் என்று அவற்றினிடத்தில் ஏற்பட்டு விட்ட நம்பிக்கையாகும். உள்நாட்டுப் பொருள்கள் நூற்றுக்கு நூறு தரமானவை, ந்ன்ருக வேலை செய்பவை என்று மக்கள் நம்பும்படிச் செய்வதே சிறந்த வழி. x உள்நாட்டில் நம்மவர் பெற்றுள்ள தொழில் நுணுக்க, நிர்வாக, விஞ்ஞான அறிவும் திறனும் எந்நாட்டாருடனும் போட்டியிடக்கூடிய அளவுக்கு