பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


கும் அதுதான் மொழி. அதுதான் இணைப்பு மொழி. அதுதான் பொதுமொழி, அதுதான் ஆட்சிமொழி என்று கூறும் காலம் வரும். அந்தக் காலம் அவசர நடையால் வருவதல்ல. அவசரக்கோலத்தால் கிட்டுவதல்ல.

துண்டில் போடுபவன் முள் அருகில் மீன்வரும் வரை எப்படிப் பொறுமையுடன் இருப்பானோ, அத்தகைய பொறுமையை நாம் கைக்கொள்ள வேண்டும்; கற்றுக் கொள்ளவேண்டும்.

தமிழ் மறையிலும் தமிழ் நெறியிலும் காலம், இடம், வகை, பொருள் ஆகியவை அறிந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வழி நடந்து தமிழ்மொழியை அரியாசனத்தில் அமர்த்தக் கூடிய நன்னாளை நாம் உருவாக்குவோம்

வகைப்பாடு : மொழி-பண்பாடு
3-1-68 அன்று சென்னையில் நடைபெற்ற உலகத்

தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் ஆற்றிய

தலைமை உரை.


22. உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு

இத்தகைய மகத்தான தொழிற் பொருட் காட்சியின் திறப்பு விழாவிற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பு மிகுந்த இந்நிகழ்ச்சியினை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பல பகுதி