பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ம: போயி, ரொம்ப அழகாகத்தான் இருக்கு. சரிகை வேஷ்டியை எடுத்துப் போட்டுக்கிட்டுவா. எதுக்குப் பொட்டி யிலே பூட்டி வைச்சிருக்கே. பூஜை போடறயா? க: க: (கணவன் உள்ளே போகிறான், ஜரிகை வேஷ்டி எடுக்க. மனைவி அதற்குள் ஆடையைச் சரிப் படுத்திக்கொள்கிறாள். அவன் வருகிறான்.) அம்மா கண்ணு! கண்ணு ! [ஒரு இளம் விதவை வருகிறாள்,] என்னாம்மா செய்துகொண்டிருந்தே? பெண்: பக்த விஜயம் படிச்சிகிட்டு இருந்தேம்பா. படிம்மா படி. இப்ப யாரு கதை படிக்கறே...? க: பெண்: துளசிதாஸ் கதை. க: படிம்மா படி; போறகதிக்கு நல்லது. உங்க சின்னம்மா சினிமா பாக்கணும்னா, நான் போயிட்டு வாரேன் கூட ஜாக்ரதையா கதவைத் தாள் போட்டுக்கிட்டு படுத்துக்கிட்டு இரு, வந்துவிடறேன். பெ செய்யப்பா. ம: கிட்டே. க: பெ: அதுக்கு என்னாடி முகத்தை அத்தினி கோண்லாக்கிக் வர்,தா, வா,வீணா சண்டைக்கு நிற்கறேயே. [கணவனும் மனைவியும் போகின்றனர் இளம் விதவை ஏக்கத்துடன் இருந்துவிட்டு .....] கிளம்பி விட்டாரு மைனர் மாதிரி. அவத்தான் அப்பா வைப் பம்பரமா ஆட்டிவைக்கறாளே. ஆவட்டும் ஆவட்டும், ரெண்டு பேருக்கும் புத்தி வருகிறாப்போல செய்துகாட்டறேன். நான் இங்கே பக்த விஜயம் படிக்கவேணுமாம். அவங்க ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போகணுமாம். எப்படி இருக்குது நியாயம்?

7

7