பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடாதிருந்தாலே, போதும், உங்கள் மானம் கப்பலேறும், உங்கள் கொட்டம் தன்னாலே அடங்கும்......

[எம். எல். ஏ.-வின். திருக்குமாரி, அதுபோது சில ஏடுகளுடன் வருகிறாள், உள்ளே இருந்து. முகத்திலே கோபக் குறிகள் உள்ளன. மூவரும் பேச்சை நிறுத்திக்கொள்கிறார்கள். வந்த வனிதா, அங்கு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு ஏட்டைப் பிரிக்கிறாள்.]

வ: யார் வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு இடமிருக்கிறது. இந்தச் சுரண்டல்களைத் தடுக்கக்கூடிய சுறுசுறுப்பு மந்திரிமார்களுக்கு இல்லை. மந்திரிகளுக்குத் தந்திரிகளாக இருக்கும் எம். எல். ஏ.-க்களோ எப்படி எப்படியோ இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எழுதினால் நல்லதோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாகத்தான் எழுதவேண்டும். ஏனென்றல் சூடு சொரணையற்றுப் போனவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

[வனிதா ஏட்டை மூடியபடி.]

அப்பா! கேட்டாயா, இந்த கேடு கெட்ட ஏடு எழுதியிருப்பதை,

ஐ: ( அலட்சியமாக) கிடக்கிறான்களம்மா!.........சாமியே கிடையாதுன்னு பேசற கும்பல், சாதாரண மனஷாளைச் குறை சொல்வதிலே என்ன ஆச்சரியமிருக்கு.

ச: ஆயாசமடையறதிலேயும் அர்த்தமில்லே......

ஜ: நாக்கு புழுத்துச் சாகப் போகிறானுங்க.....

பீ: (புன்னகையுடன் சங்கரலிங்க ஐயரைப் பார்த்து) சாபம் கொடுக்க உத்தேசமோ.....

வ: எல்லோரும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலே பேசுகிறீர்கள்......எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறான் இந்தப்பத்திரிகையிலே....இப்ப இருக்கும் எம். எல். ஏ.க்களுக்குச் சூடு சொரணையே கிடையாதாம்—எவ்வளவு துடுக்குத் தனம்.....

ஜ: அதுகளோட துடுக்குத் தனத்தை நீ என்னம்மா கண்டே......?

138