பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூர்த்தி: அம்மா பராசக்தி! நீ மிரட்டு, அதிகாரம் பண்ணு, வாய் வலிக்கத் திட்டு. நீ எஜமானியம்மா, பாவம் அவள் வேலைக்காரிதானே. அதிகாரம் பண்ணலின்னா உன் அந்தஸ்து குறைந்து விடுமே. ஊம் ஆரம்பி கூச்சலை.

சரசா: மூர்த்தி நீ ஒரு வேலைக்காரிக்குப் பரிந்து பேசுவதைக் கேட்டால் ஊர் சிரிப்பா சிரிக்கும்.

மூர்த்தி: சரசா போதும், நிறுத்து.

அமிர்: அய்யய்யோ என்னாலே உங்க இரண்டு பேருக்குள்ளே சண்டையா?

சரசா: இந்தாடி அமிர்தம், இதைக் கண்ணாடி போல் பாலிஷ் செய்யணும். (செருப்பைத் தூக்கி எறிகிறாள்.)

மூர்த்தி: எப்படிப்பட்டவன் வந்து சரசாவை அடக்கப் போகிறானோ தெரியலை. திமிர், பணத் திமிர்.

காட்சி 10

இடம்:—ஆனந்தன் வீடு, காளி கோயில்.
இருப்போர்:—ஆனந்தன், மணி.


[ஆனந்தன் கத்தியை தீட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது மணி வருகிறான்.]

ஆனந்: ஒரே வெட்டு. வேதாசலத்தினுடைய தலை கீழே உருளவேண்டும்.

மணி: ஆனந்தா நீ சுத்தப் பைத்தியக்காரன். கோபம் கண்ணை மறைக்கும். ஆத்திரத்தில் எதையாவது செய்துவிடப் போகிறாய்.

ஆனந்: நீ யார்?......என்னை தடுக்க?

மணி: நானும் உன்னைப் போல் ஒரு நாடோடி. உன் இனம் நீ உலக மறியாதவன். சூதும், சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்திலே சிக்கி சிதைந்து, நான் கற்ற பாடங்களை நீயும் கற்றிருந்தால் இந்த மாதிரி கத்தியும் கையுமாகத் திரியமாட்டாய்.

194