பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மா. தம்பி: என்னடி இது அவளை என்னவென்று நினைச்சுக் கிட்டே. இல்லை, என்னைத்தான் என்னவென்று நினைச்சுக்கிட்டே.

முத்தாயி: ஆ, அறிவு கெட்டவனே. அவளைப்போலத்தான் இவனும் பேசுறான். வீட்டிலே என்ன நடந்தது ஏது நடந்தது என்று கேட்டா, இவள் என்ன சொல்லுறது?

மா. தம்பி: இந்தா, மரியாதையாகப் பேசு.

மா. தங்கை: நீ சும்மா இரு அண்ணே; இந்த வீட்டிலே பெண் பார்க்க வந்ததுக்கு நம்ம புத்தியை செருப்பாலே அடிச்சிச் கிறணும்.

[முத்தாயி செருப்பைத் தூக்கி எறிகிறாள்.]

முத்தாயி: இந்தாடி அடிச்சுக்கோ.

மா. தம்பி: இன்னும் ஏதாவது தூக்கிபோட்டே (போகிறார்கள்.)

[முருகேசன் வருகிறான்.]

முத்தாயி: இது கெட்ட கேட்டுக்கு இரவல் ஜமுக்காளம் வேறு.

முரு: ஏ பிள்ளை முத்தாயி என்னடி இது.

முத்தாயி: கேட்டிங்களா சமாசாரத்தை அந்த குச்சுக்காரி வந்தாளே அவ ......

முரு: விருந்தாளிகள் எங்கேடி பிள்ளை.

முத்தாயி: அவங்க எழவெடுத்து நாசமாப் போக.

முரு: என்னடி பிள்ளை சபிக்க ஆரம்பிச்சுட்டே.

முத்தாயி: அந்த கொண்டைக்காரி வந்தாளே அவ உன் விடியா மூஞ்சி பிள்ளை எனக்கு வேண்டாம் அப்படி என்று சொல்லி என்னை வாயில் வந்தபடி பேசி என் பவுசை வாங்கிட்டா.

[முத்தாயி அழுக ஆரம்பித்து விட்டாள்.]

முரு: அமிர்தம், என்னம்மா இது உங்கம்மா கதர்ற கதறல் என் காதைக் குடையிது. என்னம்மா நடந்தது?

அமிர்தம்: ஒன்றுமில்லேப்பா அந்தம்மா என்னைக் கூப்பிட்டாங்க. போனேன்; உடனே அடி ஏண்டி உன் கண்ணு இப்படி போயிருக்குது, பல்லு ஏண்டி இப்படி நீண்டுக்கிட்டு இருக்கு என்று என்னென்னமோ சொன்னாளப்பா.

204