பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரு: அப்படியா சொன்னா அடப்பாவி, கண்ணு இருக்கு அரிக்கன் லைட் மாதிரி; பல் இருக்குது பச்சரிசி மாதிரி; விட்டேனா பார் அவளை.

முத்தாயி: ஏ எங்கே போறே?

காட்சி 15

இடம்:—நந்தவனம்.
இருப்போர்:—மூர்த்தி, அமிர்தம், சரசா.
[நந்தவனத்தில் மூர்த்தியும் அமிர்தமும் சந்திப்பு.]

மூர்த்தி: அமிர்தம் பலித்ததோ நான் சொன்ன யோசனை?

அமிர்தம்: ஓ! ஒரே நிமிஷத்தில் ஏச்சிப்பிப்டேன் அவர்களை.

மூர்த்தி: அமிர்தம், நான் உனக்கு இவ்வளவு உதவி செய்தேனே ; நீ எனக்கென்ன தரப்போரே?

அமிர்தம்: நீங்க பெரிய இடத்துப் பிள்ளை; நான் உங்க வீட்டு வேலைக்காரி; என்னாலே உங்களுக்கு என்ன தரமுடியும்?

மூர்த்தி: அமிதம் நான் ஒன்று கேட்கிறேன். கோபிச்சுக்கிறாமே பதில் சொல்லுறயா? உனக்கு இங்கே யாருமேலாவது ஆசை இருக்கா?

அமிர்தம்: எல்லோர் மேலேயுந்தான் ஆசையிருக்கு.

மூர்த்தி: அதைக் கேட்கல்லே அமிர்தம். உன் மனதிலே யார் மேலாவது ஆசையிருக்கா என்று கேட்டேன்.

அமிர்தம்: மனதிலே கூத்தாடும் பதினாயிரம் எண்ணங்கள்.

மூர்த்தி: அமிர்தம், நீ குடத்தை தூக்கிக்கிட்டு வளைந்து வளைந்து நடப்பாயே அதுமாதிரி வளைந்து வளைந்து பேசுறே.

அமிர்தம்: பாரத்தை சுமக்க முடியாமல்தான். அப்படி நடக்கிறேன். அதே போலே, நெஞ்சிலேயும் பாரம் இருந்தா நாக்கு வளையத்தானே செய்யும்.

205