பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூ.கொ: என்னடா நான் தந்த கடனை கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ, என்ன கிண்டலா பண்றே. நடடா நீ வேலை செய்கிற இடத்துக்கு. உன் முதலாளிகிட்டே சொல்லி உன் சம்பளத்திலேயிருந்து கொடுக்கிறதாக இதிலே கையெழுத்துப் போடச் சொல்லுடா.

ஆனந்: இன்னிக்கு காலையில்தானுங்க என்னை வேலைக்கு வேண்டாம்னு துறத்திட்டாங்க.

க.கொ: அடப்பாவி! என் தலைமேலே வேறே கல்லைத்தூக்கி போட்டிட்டையடா. ஏண்டா நீ கடையிலே இருக்கிறே என்று நம்பித்தானடா உனக்குக் கடன் கொடுத்தேன்.

ஆனந்: நானும் என்னமோ கடையிலே வேலை பார்க்கிறோம்! கொடுத்திடலாம் என்று தானுங்க தைரியமா வாங்கினேன்.

க கொ: நீ, பேச்சு மட்டுமாடா பேசுவே காளி வேசி என்று வேசம் போடறே, மனுஷனாடா நீ, மானமில்லை; வாங்கின கடனைக் கொடுக்க வழியில்லேன்னா எங்கேயாவது திருடப்போகிறதுதானேடா. அடே அதுதான் இல்லேன்னா எங்கேயாவது தூக்குப் போட்டு உங்க அப்பனை மாதிரி சாகிறதுதானேடா. (அடிக்கிறார் ஆனந்தனை)

காட்சி 19

இடம்:—ஆனந்தன் ஒரு மரத்தின் அருகில் போகிறான்.
இருப்போர்:—ஆனந்தன், மணி.


[ஆனந்தன் விரைவாக தூக்குப்போட்டுக் கொள்வதற்காக ஒரு மரத்தினடியில் போகிறான்]

மனச்சாட்சி: மரக்கிளையில் பிணம். உன் தந்தையின் பிணம். அவர் செத்தார், அக்கிரமக்காரர்களின் பணத்தாசையினால். அவன் வாழ்கிறான், நீ சாவதா? இல்லை. நீ வாழ வேண்டும்; உன் தந்தைக்காக நீ வாழத்தான் வேண்டும். நயவஞ்சகர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க நீ வாழத்தான் வேண்டும்.

[மணி சைக்கிளில் வருகிறான் மரம் கிடக்கிறது]

27

209