பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சரசா: பெரிய குற்றத்தைக் கண்டு பீடித்து விட்டீர்கள். சாமிமேல் பாட்டு படிச்சேன்.

பர: சாமிமேல் பாடும் பாட்டா இது? இப்படித்தான் ஆசை நாயகளை கூப்பிடுவதுபோல்தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறதோ? பேஷ், அதெல்லாம் ஒன்றுமில்லே; நீ யாரையோ மனதிலே நினைச்சுக்கிட்டு அதை சாமி மேலே சாக்காகப் போட்டு பாடியிருக்கிறே. உண்மையைச் சொல்லி விடு.

சரசா: கடவுளே! ஒரு புருஷன் தன் மனைவியிடம் பேசும் பேச்சா இது? என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ய வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு நான் கண்ட பலன் என்ன?

பர: என்னடி மயான காண்டம் நடத்திக் காண்பிக்கறே, எவனைப் பற்றி பாடிக்கிட்டு இருந்தே?........

[பரமானந்தன் சரசாவை அடிக்கிறான். சரசா அலுறுகிறாள். வேதாசல முதலியார் வருகிறார்]

சரசா: ஐயோ! அப்பா, அப்பா.........

பர: அங்கே ஏண்டி போறே. இங்கே வாடி.

வே: என்ன அக்கிரமம் மாப்பிள்ளை இது?

பர: என்ன மாமா சொல்றீங்க?

வே: டேய் பரமானந்தா! உத்தமிகள் வயிறெரிஞ்சா வாழமாட்டான் எவனும். ஐயோ, பொண்ணு திரௌபதி மாதிரி கதறுதப்பா.

பர: திரௌபதியா இவ. ஏம்மா திரௌபதை!

வே: அடபாவி!

பர: இடியட்.......இவங்களோடு மாறடிச்சி நமக்கு போகுது உயிர்.

232