பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமிர்: ஏய்யா பழம் வேணுமா? எடுத்துக்குங்க; நாரு இருக்காது; நல்லாயிருக்கும்.

தண்ட: நாட்டுச் சரக்குதான், நல்லாதான் இருக்கும்; பார்க்கும்போதே தெரியுதே!

பாலு: தண்டச் சோறு, அங்கே என்ன பேச்சு? அடே இவதான்.(பாட்டு) கண்டு கொண்டேனே, என் மகளை கண்டு கொண்டேனே! வா கண்ணு வீட்டுக்கு.

அமிர்: என்னய்யா அக்கிரமம்!

பாலு: அதை உன் வாயால் சொல்லாதேம்மா; வாம்மா வீட்டுக்கு. டேய் தூக்குடா கூடையை.

[அமிர்தத்தைப் பாலு முதலியார் அழைத்துச் செல்கிறார்.]

காட்சி 47

இடம்:—ஆஸ்பத்திரி.
இருப்போர்:—அமிர்தம், பாலு, டாக்டர்.
[ஆஸ்பத்திரியில் பாலு முதலியாரும் அமிர்தமும்.]

பாலு: டாக்டர்! நான் இந்த ஊருக்கு புதுசு. என்னை பர்மா பாலு முதலி என்று சொல்வார்கள். பர்மாவிலிருந்து கஷ்டப்பட்டு மணிப்பூர் வழியாக இங்கு வந்து சேர்ந்தேன். வர வழியிலே என் மகள் சுகிர்தம் காணாமல் போயிட்டா டாக்டர் திடீர்னு அகப்பட்டுட்டா டாக்டர். அவள் இருக்கிற கோலத்தை பாருங்கள் டாக்டர்; நல்லா பாருங்கள் டாக்டர். (டாக்டர் கையைப் பிடித்துப் பார்க்கிறார்.)

பாலு: என்னையா கையைப் பிடிச்சு பார்க்கிறே, ஓய் என் மகள் சுகிர்தம் கொஞ்ச நாளா என்னைப் பார்க்காததினாலே புத்தி கொஞ்சம் மாறிப் போச்சு அவ்வளவுதான்.

அமிர்: டாக்டர் எனக்கு புத்தியும் மாறல்ல, மறதியுமல்ல. தெரு வழியா போய்கிட்டு இருந்தேன்; என்னை கூப்பிட்டுக் கிட்டு வந்து என் மகளென்று சொல்றாரு.

254