பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலு: பின்னே என்னவாம்ன்னே.

அமிர்: டாக்டர் அவருக்குத்தான் ஏதாவது பைத்தியமா இருக்கும்.

பாலு: உம்,கிடையாது.

அமிர்: ஐயா என்னை தயவு செய்து வெளியே அனுப்பி விட்டால் போதும்.

பாலு: பார்த்தீங்களா, வெளியே போகணும், வெளியே போகணும். சதா இதே பொலம்பல்தான் டாக்டர். இதனால் ஆயிரம் வந்தாலும் சரி போனாலும் சரி, என் மகள் பைத்தியத்தை.

டாக்: தீர்த்துடுறேன்.

பாலு: தீத்துடுங்கோ.

டாக்: இதென்னடா வம்பாயிருக்கு. பெண்ணுக்கு பைத்தியம்னு அவர் சொல்றாரு, அவருக்கு பைத்தியமென்று அவர் பொண்ணு சொல்லுது உம்.

தண்ட: டாக்டர் அப்ப உங்களுக்குத்தான் பைத்தியம்.

டாக்: என்ன, எனக்கா?

தண்ட: பின்னே என்னங்க? நீங்க டாக்டரா இருந்துக்கிட்டே இவங்க ரெண்டு பேரிலே யாருக்குதான் பைத்தியம் என்று உங்களுக்கே தெரியலை தென்கிறீங்க.....

டாக்: சீ பைத்தியம். வாயை மூடு.

தண்ட: என்னங்க பைத்தியமா! அப்ப இங்க இருக்கிற நாலு பேருக்கும் பைத்தியம்.

பாலு: பைத்தியம் போடா உள்ளே. டாக்டர் என் மகள் பைத்தியத்தை எப்படியாவது தீர்த்துப்பிடுங்க. ஆயிரம் போனாலும் சரி; ஆயிரம் வந்தாலும் சரி; அதை தீர்த்துப்பிடுங்க.

டாக்: முதலியார்வாள் உங்க மக பைத்தியத்தை தீர்த்துப் பிடுகிறேன்; நீங்க கொஞ்சம் உள்ளே போய் இருங்க.

பாலு: அதுக்கு வேறே ஆளைப் பாருமய்யா.

டாக்: முதலியார்வாள் நீங்க உள்ளே போய் இருங்க. நான் கூப்பிடுகிறேன்.

255