பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேப்பர் விற்பவன்: பேப்பே, பேப்பர். ஹரிஹரதாஸ் கொலை வழக்கு பேப்பர்.

மணி: டேய் பேப்பே, இங்கே வா! ஏண்டா எழுத்தை போட்டு கொலை பண்ணுறே? பேப்பர் என்று சொல்லு. (மணி பத்திரிகைச் செய்தியைப் படிக்கிறான்) ஹரிஹரதாஸ் கொலை! மூர்த்தி கைது. ஆனந்தா பழிவாங்கும் படலத்துக்கு பஸ்டு கிளாஸ் சான்ஸ். பார் நம்முடைய வேலையை.

காட்சி 49

இடம்:—வேதாசலம் வீடு.
இருப்போர்:—வேதாசலம் முதலியார், மணி.
[மணி வேதாசலத்தின் வீட்டிற்கு வருகிறான்]

மணி: என்னங்க முதலியார்வாள், நடந்ததை நினைத்து என்னங்க பிரயோஜனம். இனி நடக்க வேண்டியதைப் பாருங்க.

வே: செக்ரட்டரி ஸார், இன்னும் என்ன நடக்கணும்? ஒரே மருமகன். குடிகாரன் என்று ஊரெல்லாம் ஏசுகிறார்கள்; ஒரே மகள் கண்ணைப்போல் வளர்த்தேன்! ஆனால் இன்று கண் கலங்கி நிற்கிறாள். ஒரே மகன் வீடு வேண்டாம், வாசல் வேண்டாம் என்று வெளியே போய் விட்டான். இன்று அவன்மேல் கொலைக் குற்றம்.

மணி: என்னங்க போங்க, நீங்க இவ்வளவு சீக்கிரமா மனசை விடப்படாது. இன்னும் ஆகவேண்டியதிருக்கிறது உங்களாலே எவ்வளவோ காரியம். நீங்க நான் சொன்ன வக்கீலையே ஏற்பாடு செய்யுங்கள்: அப்புறம் பாருங்கள்.

வே: என்னமோ செக்ரட்டரி ஸார்! உங்களைத்தான் மலை போல நம்பிக்கிட்டு இருக்கேன்.

மணி: நம்புங்கள். தாராளமாக நம்புங்க முதலியார்வாள்.

259