பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவிலே சரஸமாம். குருடனுக்கு கோல் தேவையாக இருப்பது போல் ஊரை ஏமாற்றி குடி கெடுப்பவனுக்கு வேஷம் தேவைப்படுகிறது. வேஷமணியாத வேதாந்தி! மோடி செய்யாத மாது!!! ஜோடி இல்லாத மாடப் புறா!! சேடி இல்லாத ராஜகுமாரி இருக்க முடியாதாம். ஹரிஹரதாஸ் இத்தகைய ஓர் வேஷதாரி! இந்த ஆஸ்ரமத்திலே காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஓட, கண்கள் கதியற்று கன்னியரை நாட, கடவுள் அருளுக்கு வழி காட்டப்பட்டதாம். சிரித்திடும் நரி சிவ சொரூபத்தில் இருந்தது இந்த ஆஸ்ரமத்தில். ஓம்! சாந்தி என்று உரத்த குரலில் கூவிவந்த இந்தக் குருவைக் காண ஒழுக்கம் கூசிற்று. தருமம் இவன் இருக்கும் திக்கைக் காண மறுத்தது.

பப்ளிக் பிராஸிகியூட்டர்: மை லார்டு, நண்பர் கடிகாரம் இல்லாத இடத்திலே செய்ய வேண்டிய பிரசங்கத்தை, நண்பர் இடத்தை மறந்து இங்கே நடத்துகிறார். ஹரிஹரதாஸ் கொல்லப்பட்டது பற்றியே இப்போது வழக்கு.

வடநாட்டு வக்கீல்: ஆம். கொலை வழக்குதான். ஹரிஹரதாஸ் கொல்லப்பட்டது உண்மை; அவனைக் கொன்றது மூர்த்தி என்பது மறுக்க முடியாத உண்மை. படுமோசக்காரனைக் கொல்வது பரோபகாரம் என்று ஏன் நாம் மதிக்கக் கூடாது? பாம்பைக் கொல்வது பாபமா?

பப்ளிக் பிராஸிகியூட்டர்: தர்ம சாஸ்திர விதிப்படி இங்கே நாம் விசாரணை நடத்த வரவில்லை. சட்டத்தின்படி கொண்டுவரப் பட்ட ஒரு கொலை வழக்கை விசாரணை நடத்துகிறோம்.

வடநாட்டு வக்கீல்: சட்டம் தர்மத்துக்குக் கட்டுப்பட வேண்டாம் என்பது என் நண்பரின் வாதமோ? சட்டம் ஓர் இருட்டறை. அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு, ஏழையால் அந்தப் பிரகாசமான விளக்கைப் பெற முடியாது. இதோ கோர்ட்டார் இதை பார்வையிடும்படி கேட்டுக் கொள்கிறேன். இது ஹரிஹரதாஸின் பிணத்தை பரிசோதித்த டாக்டரின் குறிப்பு. இறந்தவனின் இரு கரங்களிலும் உள்ளங்கையில் குண்டு பாய்ந்த வடுக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மெம்பர்ஸ் ஆப் தி ஜூரி, 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரக் பக்கிரி என்ற பயங்கரக் கொள்ளைக்காரன் இருந்தான். பெண்களிடம்கூட இரக்கம் காட்டாமல் அடித்துப் பிடுங்கி வாழ்ந்த பேயன் அவன். ஆனால் பலநாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், போலீஸாரிடம் கடைசியாக சிக்கிக்கொண்டான். ஜெயிலிலே தள்ளப்பட்ட பண்டாரப் பக்கிரி கம்பிகளை அறுத்து,

264