பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வே: குழந்தைக்கு கல்வி ஞானம் மட்டுமல்ல; உலக ஞானமும் இருக்கு.

பாலு: சுகிர்தம் புத்தகங்களெல்லாம் நிறைய படிச்சிருக்கு.

சுகிர்: அனுபவப் பள்ளியிலே இரண்டு வருஷம் படிச்சேன் என்று சொல்லுங்க மாமா கிட்டே.

வே: அப்போ சரி. இதோ சோசியரும் இருக்கிறார். நாள் பார்த்து வைத்து விடுவோம்.

தண்ட: என்னங்க நம்ம தோட்டத்துப் பக்கம் காத்தாட வர்றீங்களா?

(யாவரும் எழுந்து போய்விடுகின்றனர், மூர்த்தியும், சுகிர்தமும் தனித்திருக்கின்றனர்.)

வே: ஒரு அதிசயமுங்க! நம்ம வீட்டிலே ஒரு வேலைக்காரி ஒருத்தி இருந்தாள்...என்ன உங்க மகளை ஒரு வேலைக்காரிக்குச் சமமாக சொல்லுகிறேன் என்று வருத்தமா?

பாலு: அப்படி ஒன்று மில்லே.........

வே: இல்லை. இது நிஜந்தான். அமிர்தத்துக்கு ஒரு படாடோப ஆடையும், சுகிர்தத்துக்கு ஒரு பட்டிக்காட்டு ஆடையும் அணிந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள். ஒரு வேளை பையனுக்கு இஷ்டம் இருந்தாலும் இருக்கும்.

பாலு: சந்தேகம் என்ன அதோ பாருங்க.........

(மூர்த்தியும், சுகிர்தமும் தனித்துப் பேசுவதைச் சுட்டிக் காண்பிக்கிறார்.)

மூர்த்தி: பேதைப் பெண்ணே, வண்டு மனம் கொண்டவன் அல்ல நான். என் உயிரைக் காத்த உத்தமரின் ஆலோசனை புத்திமதி, கட்டுப்பாடே இதற்குக் காரணம்.

சுகிர்: ஓ அப்படியா? உங்கள் உள்ளத்தில் ஒரு அமிர்தம் குடிகொண்டிருந்த இடம்; அங்கே எனக்கும் இடம் அளித்தால் நெருக்கடி தானே ஏற்படும்?

மூர்த்தி: சுகிர்தம், நீ அறியமாட்டாய், என் ஆவி துடிப்பை. அது ஏனோ தெரியவில்லை. அது உன்னைக் கண்டதுமே என் உள்ளத்தில் உனக்குத் தானாகவே இடம் ஏற்பட்டு விட்டது.

சுகிர்தம்: அப்படியானால் என்னைக் கண்டதுமே அமிர்தத்தின் நினைவு மறந்து விட்டது, அப்படித்தானே!

267