பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்ல: எனக்கு அந்தச் சிரமிமின்றி தாங்களேதான் கூறி விட்டீர்களே, அந்தக் கோழைத்தனமும் சுயநலத்தோடு கூடியது.

புரா: என்னப்பா நயநலம்? கிஷ்கிந்தையை இராமர் ஸ்வீகரித்துக் கொண்டாரோ? சுக்ரீவனுக்கல்லவோ பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

வில்ல: பட்டங்கட்டினார்? எதற்கு? வானரப்பட்டாளத்தை அரக்கர் படைமீது ஏவ.

சேர: உண்மைதான், சுக்ரீவனுக்கும் இராவணனுக்கும் ஒரு விரோதமும் கிடையாது. ஆனால் சுக்ரீவனுடைய படைதான் இராவணப் படையைத் தாக்கிற்று.

வில்ல: இருதரப்பிலும் நஷ்டம், ஆரியப்படையோ அயோத்தியிலே நிம்மதியாக இருந்தது,

[இரு வீரர் ஓடிவந்து வணங்குகிறார்கள்.]

வில்ல: ஏன்? என்ன! ஏன் இப்படி அவசரம்?

வீரன்: மன்னா! வணக்கம். தமிழ் நாட்டை இழிவாகப் பேசுகின்றனர்.

வில்: எந்தப் பித்தர் பட்டியிலே கண்டாய் அந்தச் சத்தற்ற ஜன்மங்களை? தமிழரைத் தாழ்வாகப் பேசும் அளவு தலைக்கு வெறியேறிய தருக்கர் யார்?

வீரன்: கங்கைக் கரையிலே கனகன், விஜயன், என்று இரு ஆரிய மன்னர்கள் உள்ளனர்.

சேர: ஆரிய மன்னர்! ஆரியரிலே மன்னர்களும் உள்ளனர்!!

வில்: மன்னராக இருப்பதுடன், மமதையாளராகவும் உள்ளனர், அந்தப் பதர்கள். நமது தமிழ் மரபினைக் குறித்துக் கேவலமாகப் பேசினராம். கேலி செய்தனராம் தமிழ்க் குடியினரை. கேட்டீர்களா இந்தக் கெடுமதியாளர்களின் போக்கை! சிங்கத்தைக் கேலி செய்யும் செந்நாயைக் கண்டதில்லை. விழி பழுதானவன் வழி காட்டுவோனை கேலி செய்ததில்லை, வீணர்கள் வீரர்களைப் பழிக்கின்றனர்.

சேரன்: ஆகா! அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா? இடம் கிடைக்காது திண்டாடி இங்கே வந்த சடங்கள் இப்போது படமெடுத்தாடும் பாம்பாகிவிட்டனவா? ரோம் நாட்டு வீரரும்,

277