பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மடா: (அவர்கள் சென்ற பிறகு, கண்களைத் திறந்து) காயா—பழமா?

கந்த: காயும் கனியுமே இந்தக் கந்தன் கைபட்டால்.

மடா: (மலர்ந்து) பழம் எவ்விடத்தது?

கந்த: தோட்டம் அருகாமையில்தான்......ஆனால் வேலியும் காவலும் உண்டு.......

மடா: (கோபப்பார்வையுடன்) வேலியும் காவலும்! எவருக்குமா......

கந்த: (புன்னகையுடன்) அதிபருக்குக் கிடையாது.....கனி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்—கட்டளையைத்தான் எதிர்பார்த்து நிற்கிறேன்.....கனி, தங்க நிறம்!

மடா: (பூரித்து) அம்மையப்பன் அருள் கலந்ததோ......?

கந்த: மருள் கிளம்பிற்று......முதலில்—கனி, வைணவம்......

மடர்: திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்துவோம்!

கந்த: லாவண்யவதி.

மடா: உனக்கா தெரியாது......

கந்த: வஞ்சிக்கொடி!

மடா: நஞ்சிராதே......

கந்த: பஞ்சவூர் அல்ல.....பக்குவமாகப் பயிரான பாரிஜாதம்,

மட: பெயர்......

கந்த: சித்ரா......

மடா: என்ன அருமையான நாமதேயம்.....என்னதான் அலங்காரம் செய்துகொண்ட போதிலும், இந்தச் சடையும் முடியும் சனியனாகவன்றோ இருக்கும், கன்னியின்` கண்ணும் கருத்தும் கலங்குமோ! கச்சி ஏகம்பா!

302