பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் நல்ல காரியத்துக்காக, ஏழைப் பிள்ளைகளுக்காக, விழா நடத்தறான்...நாமதான் பணமோ பணம்னு அலையருேம்...அவன் அப்படி அல்லய்யா...ஊருக்கு உபகாரம் செய்யணும் என்கிற நோக்கம் இருக்குது...நல்லதுதானே அது...

[வந்தவர் தலை அசைக்கிறார், மகனைச் சிறிது நேரத்திற்கு முன்பு கண்டித்தவர் இப்போது பாராட்டுகிறாரே; இது என்ன விந்தை என்று எண்ணி ஆச்சரியப்படுகிறான் வேலையாள்.]

பணமா பெரிசு......கூடவேவா கொண்டுகிட்டுப் போயிடப் போறோம் மூட்டைகட்டி....பத்துப் பேருக்கு உபகாரம் செய்து நல்ல பேர் எடுக்கணுமய்யா.....ஏதோ நமக்கெல்லாம் அந்த நினைப்பும் இல்லே.....நேரமும் இல்லே மகனாவது ஊருக்கு உபகாரம் செய்கிறானேன்னு எனக்கு மகிழ்ச்சி...

வ: அது சரிங்க...ஆமாங்க...

சி: அதனாலேதான் நானும் அவன் நாலு காசு செலவழித்தாலும் பரவாயில்லேன்னு இருக்கறேன்...கேட்டதைத் தட்டாத கொடுக்கிறேன்....இதோ பாருங்க, பணம் சேரச்சேர குணம் வளரணும்...ஊருக்கு உபகாரம் செய்யணும்.....உமக்கெங்கே அதெல்லாம் பிடிக்கப்போவுது...

வ:அப்படிச் சொல்லிவிடலாமுங்களா..ஏதோ என் சக்தியானுசாரம் நானும் செய்து கிட்டுத்தான் வர்ரேன்.....இந்த வருஷம் செல்லியம்மன் கோயில் சேவற்காவடி உற்சவச்செலவு பூரா நான்தானுங்க...

சி: அதைச் செய்வே; தாயே! என்னை மன்னித்துவிடு, பாவத்தைக் கழுவிவிடுன்னு...அதுவும் ஒருவிதமான வியாபாரந்தான்யா...இதோ பாரய்யா, அதிலே எல்லாம் பலன் இல்லே இதோ நம்ம மகன் ஈடுபட்டு இருக்கற காரியம் இருக்கு பாரு, அது சிலாக்கியமானது...

வ: உண்மை தானுங்க, ஏழை எளியவங்களோட கண்ணைத் திறந்து வைக்கறது புண்ய காரியந்தானுங்க...

சி: அப்படிப்பட்ட காரியத்துக்குக் கொடுங்களேன் ஒரு ஆயிரம்...

வ: (திடுக்கிட்டு ) ஒரு ஆயிரமுங்களா...

323